உலக யானைகள் தினம் ஆகஸ்ட் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தமிழ் மண்ணில் யானையை போன்று கொண்டாடப்பட்ட வனஉயிர் வேறெதுவும் இருக்க முடியாது. எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி போன்று இன்றைய தலைமுறையும் யானை புகழ் பாடும் சினிமாக்களும் வந்துள்ளன. அதை சினிமா ரசிகர்களும் வெகுவாக கொண்டாடி மகிழ்கின்றனர்.
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மயூரநாதர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அபயாம்பாள் என்ற யானை உள்ளது. யானைகள் தினமான இன்று (ஆகஸ்ட் 12) இக்கோயிலில் யானைக்கு புதிய ஆடைகள் உடுத்தி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
கரோனா ஊரடங்கால் யானை கொட்டகையிலேயே முடங்கியிருந்த அபயாம்பாள் யானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், வனத்துறையினர் வனசரக அலுவலர் குமரேசன் தலைமையில் கோயிலில் யானை முறையாக பராமரிக்கப்படுகிறதா? தேவையான அளவு உணவு வழங்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து யானைக்கு பழங்கள் வழங்கினர். யானைகள் பராமரிப்பது குறித்து யானைப் பாகன் செந்திலுக்கு ஆலோசனைகள் வழங்கி சென்றனர்.
இதையும் படிங்க: அங்கோடா லொக்கா வழக்கு: காதலி உள்பட மூவருக்கு 3 நாள் காவல்