நாகப்பட்டினம் - மறைமலைநகர் பகுதியைச்சேர்ந்தவர் நா.காவியன். 72 வயதான இவர், தீக்கதிர் நாளிதழின் நாகை மாவட்ட மூத்த பத்திரிகையாளராகவும், கலை இலக்கியவாதியாகவும், களப்பணியாற்றி வந்தவர். இந்நிலையில் நேற்று (ஜன.11) திடீர் மாரடைப்புக் காரணமாக நாகையில் உயிரிழந்தார்.
இதையடுத்து, நாகை மறைமலை நகரிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (ஜன.12) இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து பத்திரிகையாளர் நா.காவியனின் பூத உடல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: உடல்நலக்குறைவால் முன்னாள் அமைச்சர் காலமானார்