ETV Bharat / state

மணமகனை கண்கலங்க வைத்த திருமண பரிசு.. சீர்காழி நண்பர்களின் வீடியோ!

Marriage Gift: சீர்காழியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் இறந்த தந்தையின் உருவ படத்தை பரிசாக பெற்ற மணமகன், தந்தை பாசத்தால் மணமேடையில் கண் கலங்கிய நிகழ்வு அனைவரது மனதையும் நெகிழச் செய்துள்ளது.

மணமகனின் இறந்த தந்தை உருவப்படத்தை திருமண பரிசாக வழங்கிய நண்பர்கள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 10:42 PM IST

மணமகனின் இறந்த தந்தை உருவப்படத்தை திருமண பரிசாக வழங்கிய நண்பர்கள்

மயிலாடுதுறை: விஞ்ஞான வளர்ச்சி அனைத்து துறைகளிலும் பல்வேறு வகைகளில் மனிதர்களுக்கு உதவியாக இருந்து வருகிறது. மேலும், மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் நிகழ்வுகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. அதற்கு எடுத்துக்காட்டாக, சமீப நாட்களாக இறந்தவர்களின் சிலைகளை உருவாக்கி, அதை வீட்டின் முக்கிய நிகழ்வுகளில் பயன்படுத்துவது வழக்கமாகி வருகிறது.

அதுபோன்ற சம்பவம் தான் தற்போது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்றுள்ளது. சீர்காழியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் நண்பர்கள், அவரது திருமண நிகழ்வில், இறந்த அவரது தந்தையின் முழு உருவத்தை வடிவமைத்து திருமண பரிசாக சர்ப்ரைஸ் (Surprise) அளித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த உமையாள்பதி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருடைய கணவர் நாகராஜன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இந்த நிலையில், நாகராஜின் இளைய மகன் ராஜ்குமாருக்கும், திருப்பங்கூரையைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணுக்கும் இன்று (அக்.20) திருமணம் நடைபெற்றது.

இதற்கு முன்னதாக, தந்தை மீது அதிக பாசம் கொண்ட ராஜ்குமார், தனது திருமணத்துக்கு தந்தை இல்லையே என வருந்தி, அதை தனது நண்பர்களிடம் கூறி கண் கலங்கியுள்ளார். இதனையடுத்து, தனது நண்பணின் ஏக்கத்தை போக்கும் வகையில் அவரது ஆசையை நிறைவேற்ற எண்ணிய நண்பர்கள், ராஜ்குமாரின் தந்தை நாகராஜின் உருவத்தை தத்ரூபமாக வடிவமைத்தனர்.

அவ்வாறு வடிவமைக்கப்பட்ட நாகராஜின் உருவத்தை, ராஜ்குமாரின் திருமணத்திற்கு எடுத்துச் சென்ற நண்பர்கள், மணமகன் ராஜ்குமார் முன்பு நிறுத்தினர். அதனைக் கண்டு மணமகன் ராஜ்குமார் மகிழ்ச்சியில் ஒருபுறமும், தந்தையின் பிரிவில் மறுபுறமும் என தந்தையை நினைத்து கண்கலங்கினார்.

தொடர்ந்து ராஜ்குமாரின் தந்தையின் உருவம் புரோகிதர்கள் முன் வைத்து திருமண சடங்குகள் நடந்தது. அப்போது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற ராஜ்குமார், தந்தை நாகராஜின் உருவத்தைப் பார்த்து கண்ணீர் விட தொடங்கி விட்டனர்.

இந்நிலையில், திருமணத்துக்கு வந்த உறவினர்களும் இதைப் பார்த்து நெகிழ்ச்சி அடைந்தர். திருமண நிகழ்வில் பரிசுகள் ஆயிரம் வந்தாலும், நண்பர்கள் சேர்ந்து கொடுத்த இந்த பரிசு, திருமணத்திற்கு வந்தவர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: LKG மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்; மூக்கில் ரத்தம் வந்ததால் மருத்துவமனையில் அனுமதி.. வேலூரில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.