நாகை மாவட்டம் மயிலாதுறை அருகே திருவாடுதுறை ஆதீன மடாதிபதி பிறந்த ஜென்ம நட்சத்திர நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மயிலாடுதுறை ஆன்மிக பேரமைப்புடன் இணைந்து புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சார்பாக இந்த இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
இதனை திருவாடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியர் தொடங்கிவைத்தார். இதில் கண்பார்வை குறைவானோருக்கு இலவச கண் கண்ணாடியும், சர்க்கரை, ரத்த அழுத்தம் பார்க்கும் கருவிகள், ஈசிஜி போன்ற நவீன மருத்துவ உபகரணங்கள் கொண்டு மருத்துவ பரிசோதனைகளும் நடந்தது. இதில் திருவாடுதுறை ஆதீன பயணிகள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர்.