நாகை மாவட்டம் திருமருகல், திட்டச்சேரி, நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் அதிகப்படியான ஆடுகள் திருடு போவதாக பொதுமக்கள் மத்தியில் தொடர் புகார்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், நாகூர் அருகே காவல் துறையினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திட்டச்சேரியில் இருந்து நாகை நோக்கி வந்த சொகுசு காரை மறித்து அவர்கள் சோதனை செய்தபோது, காரின் உள்ளே மூன்று ஆடுகள் இருந்தது தெரியவந்தது.
பின்னர் காருக்குள் இருந்த தமிம் அன்சாரி, முகமது செய்யது, தனுஷ், மகேந்திரன் ஆகிய நான்கு இளைஞர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அந்த ஆடுகளை அவர்கள் திருடியது தெரியவந்தது. இதையடுத்து நான்கு பேரையும் கைது செய்த காவல் துறையினர், ஆடுகளைத் திருட பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதேபோன்று எத்தனை ஆடுகளைத் திருடினர் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கண்மாயில் 10க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த 2 நபர்கள் கைது!