நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் கிடங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராகவேந்திரன் (35). இவர் சிதம்பரத்தில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரின் வீட்டுக்குள், கடந்த 20ஆம் தேதி நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும், மூன்று இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியும் அங்கிருந்து தப்யோடிவிட்டனர்.
இதுகுறித்து ராகவேந்திரன் அளித்த புகாரின்பேரில் பொறையாறு காவலர்கள் வழக்கு பதிவுசெய்து சீர்காழியை சேர்ந்த விக்னேஷ் (21), சிதம்பரம் விமல்ராஜ் (21), ராதாநல்லூர் குற்றாலீஸ்வரன் (22), திருவாரூரை சேர்ந்த சிவராஜன் (21) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராகவேந்திரனை தாக்கவந்ததும், அவர் இல்லாத ஆத்திரத்தில் வீடு மற்றும் வாகனங்களை தாக்கிவிட்டு சென்றதாக ஒப்புதல் வாக்குமூலம் கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து பொறையாறு போலீசார் நான்கு பேரையும் கைது செய்து கொலைமுயற்சி, வீடுபுகுந்து தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: கிருமி நாசினி தெளிப்பதாகக் கூறி ஏடிஎம்மில் ரூ.13 லட்சம் கொள்ளை