அறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி அரசு உத்தரவுப்படி சமபந்தி போஜனம் எனப்படும் சமபந்தி விருந்து பல்வேறு ஆலயங்களில் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை திருந்தளுரில் உள்ள பரிமளரெங்கநாதர் ஆலயத்தில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் சட்டப்பேரவை உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து பர்கூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன், பேரறிஞர் அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதேபோல், பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி பர்கூர் ஒன்றிய அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியானது, ஒன்றியச் செயலாளர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது. அப்போது கிருஷ்ணகிரி நகர அதிமுக செயலாளர் கேசவன், ராசுவிதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: மதுரையில் கருணாநிதிக்கு சிலை வைக்கக் கோரிய வழக்கு: 8 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவு!