நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. ஆர்டிக் பிரதேசங்களில் நிலவும் கடும் குளிர் காரணமாகவும், உணவுதேடியும், அங்குள்ள பறவைகள் ஆயிரக் கணக்கில் கோடியக்கரை சரணாலயத்திற்கு வந்துசெல்வது வழக்கம். அந்தவகையில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் தொடங்கும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை, இங்கு தங்கும் வெளிநாட்டுப் பறவைகள், அதன் பின்னர் தங்கள் சொந்த நாடுகளுக்கே திரும்பிச் செல்கின்றன.
ஈராக், ஈரான், சைபீரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் பிளமிங்கோ ( பூ நாரை) கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் அதிகளவு காணப்படும். கொசுஉள்ளான், சிவப்புகால் உள்ளான், வரித்தலை வாத்து, கூழக்கிடா மற்றும் உள்நாட்டுப் பறவைகளான செங்கால் நாரை, கடல் காகம் என 200க்கும் அதிகமான பறவை வகைகள் இங்கு படையெடுத்து கண்களுக்கு விருந்தளிக்கின்றன. இங்கு வரும் பெரும்பாலான பறவைகள், இங்கேயே முட்டையிட்டு குஞ்சு பொரித்து தனது குடும்பத்துடன் சொந்த நாடு திரும்புகின்றன.
கோடியக்கரையில் பறவைகள் வரத்து அதிகரித்ததைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்காக மாவட்ட நிர்வாகம் தளர்வுகள் அளித்து விரைவில் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நுகர்வோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வேளாண் சட்டம்' - வேளாண் அறிஞர் பாமயன் எச்சரிக்கை!