நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, தெற்குப்பொய்கை நல்லூர், பரவை, பூக்காரத்தெரு, சிவன்கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு முல்லைப் பூ சாகுபடி நடைபெறுகிறது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் தொடங்கி அக்டோபர் வரை இதன் சீசனாகும்.
தற்போது சீசனாக இருந்தாலும், கரோனாவின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டதால், திருமண விழாக்கள், கோயில் விழாக்கள் போன்றவை நடைபெற தடை விதிக்கப்பட்டதால், முல்லைப் பூக்களை பிற மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முல்லைப் பூக்கள் செடியில் இருந்து பறிக்கப்படாததினால், பூக்கள் கீழே கொட்டி வீணாகி, பூச்செடிகளானது பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகி வீணாகும் நிலை ஏற்பட்டு விவசாயிகள் கடும் இழப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தத் தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தங்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று முல்லைப் பூ விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வாங்குவதற்கு ஆளில்லாமல் வயலில் காய்ந்து உதிரும் பூக்கள்... ஊரடங்கால் பாதித்த விவசாயிகள்!