மயிலாடுதுறை: சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றின் திட்டு கிராமங்களான நாதல்படுகை, முதலை மேடுதிட்டு, வெள்ளை மணல் கோரைதிட்டு உள்ளிட்ட கிராமங்களில் ஐந்தாவது நாளாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கிராமங்களில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் படகுகளின் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். நான்கு இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவம் அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
வெள்ள நீரின் அளவு படிப்படியாக உயர்வதால் தாழ்வான பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வருவாய் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். பல்வேறு சாலைகளில் நீரின் அளவு அதிகரிப்பதால் தாழ்வான பகுதியில் இருக்கும் கிராம மக்கள் சாலையில் கயிறுகளை கட்டி கிராமத்தை விட்டு வெளியேறிவருகின்றனர்.
இதையும் படிங்க: கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி