ETV Bharat / state

சுருக்குமடி வலை விவகாரம்: அரசின் முடிவுகளுக்கு பெரும்பாலான மீனவ கிராமங்கள் ஒத்துழைப்பு! - nagapattinam news

நாகப்பட்டினம்: சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற அரசின் முடிவுக்கு ஒத்துழைப்பதாக 49 மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று (ஜூலை 17) நடைபெற்ற பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

நாகை மாவட்டச் செய்திகள்  சுருக்கு மடி வலை  சுருக்குமடி வலை விவகாரம்  surukumadi net  surukumadi nets  surukumadi nets issue  nagapattinam news  negotiation meeting
சுருக்குமடி வலை விவகாரம்: அரசின் முடிவுகளுக்கு பெரும்பாலான மீனவ கிராமங்கள் ஒத்துழைப்பு
author img

By

Published : Jul 18, 2020, 10:25 AM IST

தமிழ்நாடு அரசு சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தக்கூடாது என்று அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு அரசு ஏற்பாடு செய்திருந்தது. நாகையில் உள்ள தனியார் திருமண அரங்கில் நாகை மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள், காவல் துறையினர், மீனவப் பிரதிநிதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் நாகை மாவட்டத்தில் உள்ள 54 மீனவ கிராமங்களுக்கு அழைப்பு கொடுத்த நிலையில், 49 கிராமத்தைச் சேர்ந்த 120 மீனவப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். 12 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அரசின் முடிவிற்கு ஆதரவு தெரிவித்து சுருக்குமடி வலையை பயன்படுத்த மாட்டோம் என்று 35 மீனவ கிராமப் பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டனர்.

நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாதல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனவர்கள்

மேலும், அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த 12 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மீனவர்கள் 25 நாட்களுக்குள் சுருக்குமடி வலைகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

54 மீனவ கிராமங்களில் 5 கிராமங்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதும், நம்பியார் நகர், சாமந்தான் பேட்டை ஆகிய இரண்டு கிராமங்கள் நடுநிலை வகித்ததும் குறிப்பிடத்தக்கது. நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றதால் சுருக்குமடி வலை விவகாரத்தில் அரசின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையின் போது வெளியிருந்த சில மீனவர்கள் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: சுருக்குமடி வலை, சீன எஞ்ஜினுக்கு அனுமதிக்கோரி மீனவர்கள் உண்ணாவிரதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.