நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். அந்த அறிவிப்பு அப்படியே கிடப்பில் போடப்பட்டள்ளதாக அக்கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், மீன்பிடித் துறைமுகம் அமைத்து தரக்கோரி அக்கிராம மக்கள் கடந்த டிசம்பர் மாதம் பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும் என அரசு அறிவித்ததை அடுத்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதற்கான எவ்வித பணிகளும் இதுவரை தொடங்கப்படாததால், அதிருப்தி அடைந்த மீனவர்கள், தூண்டில் வளைவு மீன்பிடித் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்காத அரசின் மீது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக, கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்துள்ளனர்.
அதில், "தங்களது கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகமும் மீன்வளத் துறை அமைச்சரும் செவிமடுத்து கேட்காமல் புறந்தள்ளியதால், எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க போவதில்லை" என கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வே கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு- எடப்பாடி பழனிசாமி