ETV Bharat / state

மீனவர்களுக்கான நீச்சல் போட்டி - மீனவர்கள் பங்கேற்பு!

நாகை: பூம்புகாரில் நடைபெற்ற மீனவர்களுக்கான நீச்சல் போட்டியில் 15க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர்.

Poompuhar
author img

By

Published : Nov 20, 2019, 9:42 PM IST

உலக மீன்வள தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டம் பூம்புகாரில் மீனவர்களுக்கான நீச்சல் போட்டி நடைபெற்றது. மீன்வளத்துறை சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் சந்திரபாடி, பூம்புகார், பழையார், திருமுல்லைவாசல் உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர்.

போட்டியை மீன்வளத்துறை உதவி இயக்குனர் நடராஜன் தொடக்கி வைத்தார். போட்டியின் முடிவில் சந்திரபாடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த சாரதி எனும் மீனவர் முதல் பரிசையும், பூம்புகாரைச் சேர்ந்த மகாதேவன் இரண்டாம் பரிசையும், முத்துமணி எனும் மீனவர் மூன்றாம் பரிசையும் வென்றனர்.

நீச்சல் போட்டியில் 15க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்பு

மீன்வளத்தை பாதுகாப்பது குறித்து நடத்தப்பட்ட இப்போட்டியை ஏராளமான மீனவர்களும், மீனவ குடும்பங்களும், பொதுமக்களும் கண்டுகளித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு உதவி இயக்குனர் நடராஜன் பரிசுகளை வழங்கினார்.

இதையும் படிங்க: நாட்டு படகு மீனவர்களுக்கு வாக்கி டாக்கி!

Intro:பூம்புகாரில் மீனவர்களிடையே நடைபெற்ற நீச்சல் போட்டியில் சந்திரபாடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் முதல் பரிசை தட்டிச் சென்றார்:-

Body:நாகை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் மீனவர்களிடையே நீச்சல் போட்டி நடைபெற்றது. உலக மீன்வள தினத்தை முன்னிட்டு மீன் வளத்தை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீன்வளத்துறை சார்பில் நீச்சல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சந்திரபாடி, பூம்புகார், பழையார், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர். போட்டியை மீன்வளத்துறை உதவி இயக்குனர் நடராஜன் துவக்கி வைத்தார். இந்தப்போட்டியில் சந்திரபாடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த சாரதி என்ற மீனவர் முதல் பரிசையும், பூம்புகாரை சேர்ந்த மகாதேவன் இரண்டாம் பரிசையும், முத்துமணி என்ற மீனவர் மூன்றாம் பரிசையும் தட்டிச் சென்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.