தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பாளராக அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் எஸ்.பவுன்ராஜ் எம்எல்ஏ அறிவிக்கப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வானகிரி மீனவக் கிராம பஞ்சாயத்தார்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது அவருக்கு மீனவக் கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக, அங்குள்ள ஸ்ரீரேணுகாதேவி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர். மரியாதை நிமித்தமாக மீனவப் பஞ்சாயத்தார்களுக்கு பொன்னாடை அணிவித்தார். இதேபோல், பூம்புகார், சின்னங்குடி, சின்னமேடு உள்ளிட்ட மீனவக் கிராமங்களுக்குச் சென்று மீனவப் பஞ்சாயத்தார்களை சந்தித்து பொன்னாடை போர்த்தி ஆதரவை திரட்டினார்.
இதுகுறித்து, அவர் கூறுகையில் வேட்பாளர் எஸ்.பவுன்ராஜ் மீனவர்களுக்கு அதிமுக அரசு செய்துள்ள நலத்திட்டங்களையும், தற்போது அறிவித்துள்ள திட்டங்களையும் எடுத்துக்கூறினார்.
தேர்தல் பரப்புரை துண்டு பிரசுரங்களை வழங்கினார். மீண்டும் என்னை வெற்றி பெற செய்து தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைத்திடவும்ல் இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதில் அமமுகவைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் தாய் கழகமான அதிமுகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : '63 ஆண்டுகளாக கமல் மக்களோடுதான் இருக்கிறார்' - ஸ்ரீபிரியா