மயிலாடுதுறை: தரங்கம்பாடி ரேணுகாதேவி அம்மன் ஆலயத்தில் மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வெள்ளக்கோயில், பெருமாள்பேட்டை உள்ளிட்ட 20 மீனவ பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.
சுருக்குமடி பயன்படுத்த அனுமதிக்க கூடாது
இக்கூட்டத்தின் முடிவில் சுருக்குமடி, இரட்டைமடி வலை, அதிவேக குதிரைதிறன் கொண்ட எஞ்சினை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த அனுமதிக்க கூடாது.
சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டால் போராட்டம்
மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்துவதாக கூறி எடுக்கப்படும் அரசின் நடவடிக்கையால் சிறு தொழில் பாதிக்கப்பட்டால், மூன்று மாவட்ட மீனவர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: கன்வேயர் பெல்ட் அமைக்கும் விவகாரம் - எண்ணூர் மீனவர்களுடன் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை