தடை செய்யப்பட்ட என்ஜின்களை பயன்படுத்தி கடலில் மீன் பிடிப்பதால், மீன் வளம் அழிந்து போவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அதிவேக என்ஜின்களை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு, மீன் வளத் துறையினர் அதனை அகற்றிக் கொள்ள சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்து இன்று (அக்.13) நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில், நாகை, காரைக்கால் ஆகிய மாவட்ட மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், காரைக்கால், கிளிஞ்சல்மேடு, தரங்கம்பாடி, பழையார் உள்ளிட்ட 54 மீனவ கிராம பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரும் மீன்பிடி தடை காலத்திற்குள், தடை செய்யப்பட்ட அதிவேக என்ஜின்களை நாகை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் உடனடியாக அகற்றிக் கொள்ள வேண்டும் என்றும், இதனை அந்தந்த விசைப்படகு உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் அரசு அறிவித்துள்ள என்ஜின்களை பொருத்தி சிறு தொழிலுக்கு பாதிப்பு இல்லாமல் மீன்பிடி தொழிலில் மீனவர்கள் ஈடுபடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க:பயணியர் நிழற்குடையில் பட்டியலின ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பெயர் புறக்கணிப்பா?