நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் மீன் இறங்கு தளம் அமைக்கப்படும் என கடந்த 2015ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
ஆனால் இங்கு மீன் இறங்கு தளம் அமைப்பதற்கான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இதைக் கண்டித்து அப்பகுதி மீனவர்கள் நேற்று (டிச.21) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீண்டும் அவர்கள் இன்று (டிச.22) இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த மீன்வளத்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் புதிய திட்டம் தயார் செய்து தரப்படும் என அலுவலர்கள் கூறினர். அதற்கு மீனவர்கள் பழைய திட்டத்தில் கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும் என அலுவலர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால், மீனவர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வேளாண் சட்டங்கள்: மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!