நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், மீன் வியாபாரிகள் இடையே நாகை சீர்காழி அருகே பூம்புகாரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், இன்று (16/03/20) நாகை மாவட்ட ஆட்சியரை 24 கிராமங்களின் மீனவர்கள் சந்தித்து மனு கொடுக்க உள்ளதாகவும், சுருக்கு மடி வலையை பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்க அரசு அனுமதி வழங்க வேண்டும். ஆனால் அரசு அனுமதி வழங்காததால் கடந்த எட்டு மாதங்களாக தங்களது வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். சுருக்கு மடி வலையை தடை செய்யக்கோரி போராட்டம் செய்யும் கிராமத்திலிருந்து மீன்கள் வாங்க போவதில்லை எனவும் மீன் வியாபாரிகள் எச்சரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றினர்.
அரசு அனுமதிக்காவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அந்த 24 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் அறிவித்துள்ளனர். சில நாட்களாக இருதரப்பு மீனவர்களிடையே கடலில் மீன்பிடிக்கும் போது தகராறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 24 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: வேதாரண்யத்தில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் - கூட்டத்தில் முடிவு.!