நாகை: சுருக்கு மடி வலைக்கு அனுமதி வழங்கக் வேண்டும் என்றும் இல்லையென்றால் 1983ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ள 21 வகையான சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் மடவாமேடு, பூம்புகார், சந்திரபாடி உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சார்ந்த மீனவர்கள் கடந்த 3 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் , மீன்வளத்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் 1983ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ள 21 வகையான சட்டங்களை நாளை முதல் கடைபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தன் பேரில் மீனவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெற்றனர்.
இதனையடுத்து சுருக்குமடி வலை மீனவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும், மூன்று நாள்களில் நடவடிக்கை இல்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சுருக்குமடி வலை விவகாரம் - மீனவர்கள் பேச்சுவார்த்தை