ETV Bharat / state

நடுகடலில் சீற்றம்: படகிலிருந்து நிலைதடுமாறி கடலில் விழுந்த மீனவர் பலி

நாகை: கடல் சீற்றம் காரணமாக, படகிலிருந்து தவறி விழுந்த மீனவர் பரிதமாக உயிரிழந்துள்ளார்.

File pic
author img

By

Published : Jun 17, 2019, 11:46 PM IST

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஜூன் 15ஆம் தேதி , ஆனந்தவேல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நாகையைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென சூறை காற்று வேகமாக வீசியதால், படகு அலைகளுக்கு நடுவில் சிக்கி சாய்ந்தது.

இதில் படகில் இருந்த நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்ற மீனவர் நிலைதடுமாறி தவறி விழுந்தார்.

செல்வம்
பலியான மீனவர் செல்வம்

இதனை சற்றும் எதிர்பாராத சக மீனவர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் செல்வம் காலில் மீன்பிடி வலை சிக்கியதால் நிகழ்விடத்திலேயே கடலில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.

உயிரிழந்த செல்வத்தின் உடலை மீட்ட சக மீனவர்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திற்கு நாளை (ஜூன் 18) கொண்டு வருகின்றனர். மீன்பிடிக்கச் சென்ற மீனவர் நடுக்கடலில் உயிரிழந்த சம்பவம் உறவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:கடல் சீற்றம் காரணமாக, நடுக்கடலில் படகிலிருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு.
Body:கடல் சீற்றம் காரணமாக, நடுக்கடலில் படகிலிருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு.

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 15ம் தேதி , ஆனந்தவேல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு மற்றும் நாகையைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் இன்று மதியம் சென்னையிலிருந்து கல்பாக்கம் இடையே சுமார் 80 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடு கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, கடலில் எழுந்த சூறை காற்று வேகமாக வீசியதால், படகு அலைகளுக்கு நடுவில் இருபுறமும் சாய்ந்தது.அப்போது படகில் இருந்த நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (38) என்ற மீனவர் நிலைதடுமாறி நடு கடலில் தவறி விழுந்தார்.

இதனை சற்றும் எதிர்பாராத சக மீனவர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் செல்வம் காலில் மீன்பிடி வலை சிக்கியதால், அவர் சம்பவ இடத்திலேயே கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிரிழந்த மீனவர் உடலை மீட்ட சக மீனவர்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திற்கு உடலை நாளை காலை கொண்டு வருகின்றனர். மீன்பிடிக்கச் சென்ற நாகை மாவட்டம் கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த மீனவர் நடுக்கடலில் உயிரிழந்த சம்பவம் உறவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.