மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அரிவளூர் கிராமத்தில் மின்கசிவு காரணமாக நடராஜன் என்பவரது கூரை வீடு எரிந்து நாசமானது. இதில் நடராஜனின் உடைமைகள், கல்லூரியில் படிக்கும் அவரது மகளின் கல்விச் சான்றிதழ்கள், அரசு ஆவணங்கள் உள்ளிட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான அனைத்துப் பொருள்களும் நாசமாகின.
இச்சம்பவம் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் விஜிகே. செந்தில்நாதன், பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் ஆகியோர் நேரில் சென்று நடராஜன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
விஜிகே. செந்தில்நாதன் 10 ஆயிரம் ரூபாயும், எஸ். பவுன்ராஜ் ஐந்தாயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கினர்.
இதையும் படிங்க: பட்டாசு கடைக்கு உரிமம் வழங்க கையூட்டு: தீயணைப்புத் துறை அலுவலர் கைது