காரைக்கால் மாவட்டம், போலகத்தைச் சேர்ந்தவர் பிலிப்தாஸ். இவர் நாகப்பட்டினம் மாவட்டம், செல்லூர் கிராமத்தில் உள்ள தனது மகள் ஜெசிந்தாமேரியை பார்ப்பதற்காக இன்று (ஆக. 27) அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் வீட்டின் முன் வாசல் பகுதியில் இருந்த தென்னை மரத்தில் ஏறிய பிலிப்தாஸ், மரத்திலிருந்த தென்னங்கீற்றுகளை கத்தியியால் வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது தென்னை மரம் அருகே சென்ற உயர் அழுத்த மின்சாரம் திடீரென்று பிலிப்தாஸ் மீது பாய்ந்ததில், அவரது மகளின் கண்ணெதிரிலேயே பிலிப்தாஸ் தென்னை மட்டைகளின் இடையில் சிக்கி உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த நாகப்பட்டினம் தீயணைப்புத்துறை வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தென்னை மரத்தில் உயிரிழந்த நிலையில் இருந்த பிலிப்தாஸின் உடலை மீட்டனர்.
மின்சாரம் தாக்கி மகளின் கண்ணெதிரே உயிரிழந்த தந்தை! - தந்தை பலி
நாகப்பட்டினம் : தென்னை மரம் ஏறிய போது மின்சாரம் தாக்கி மகளின் கண்ணெதிரே தந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.