ETV Bharat / state

குறுவை சாகுபடி பணி தொடக்கம் - உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகள் கவலை!

மயிலாடுதுறை: குறுவை சாகுபடி பணி தொடங்கியுள்ள நிலையில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் டிஏபி அடி உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகல் கவலை அடைந்துள்ளனர்.

விவசாயிகள் கவலை
Farmers issue
author img

By

Published : Apr 23, 2021, 8:37 AM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் முற்பட்டக்குறுவை நடவு பணி நடைபெற்றுவருகிறது. மாவட்டத்தில் 50ஆயிரம் ஏக்கரில் நிலத்தடிநீரை கொண்டு குறுவை சாகுபடி செய்வது வழக்கம். மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குறுவை பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் விவசாயிகள் முற்பட்ட குறுவைக்கு அடியுரமாக டிஏபி இடுவது வழக்கம். ஏக்கருக்கு ஒரு மூட்டை வீதம் விவசாயிகள் உபயோக படுத்துவார்கள். தற்பொழுது மத்திய அரசு டிஏபி விலையை ரூ. 700 வரை உயர்த்தியுள்ளது. ஏற்கனவே அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் மூட்டை ரூ. 1100 முதல் ரூ. 1200 வரை விற்பனையாகி வருகிறது.

உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகள் கவலை

வெளி மார்கெட்டில் ரூ. 1800 முதல் ரூ. 1900 வரை விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் டிஏபியை போட்டிபோட்டு கொண்டு கேட்கும் பொழுது 10 மூட்டை கேட்டால் 3 மூட்டை என்று வழங்குகின்றனர். மேலும் கேட்டால் உரம் இருப்பு இல்லை என்று கைவிரிக்கின்றனர். மூவலூர், ஆனைமேலகரம், சித்தர்காடு ஊராட்சிகளுக்கு மல்லியம் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு மூவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் உரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்பொழுது விவசாயிகள் டிஏபி உரம் கேட்டதற்கு இருப்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 64 கூட்டுறவு வங்கி கிளைகள் மூலம் உரங்களை வழங்கி வரும் மயிலாடுதுறை மாவட்டத் துணைப்பதிவாளர் அலுவலகத்தில் கேட்டதற்கு, முற்பட்ட குறுவைக்கு ஓரளவிற்கு தான் அடியுரம் விற்பனையாகும் என்பதால் இருப்பு குறைவாக இருந்திருக்கலாம், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையும் படிங்க: நடுக்கடலில் சிக்கித் தவித்த எட்டு இந்திய மீனவர்கள் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.