கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அத்தியாவசிய பொருள்களை விற்பனைசெய்யும் கடைகளுக்கு மட்டுமே கட்டுபாடுகளுடன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் பிற தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் எடமணல், கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 ஏக்கரில் பயிரிடப்பட்ட வெட்டிவேர் தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக அவற்றை அறுவடை செய்யமுடியாமலும், பாதுகாப்பாகப் பராமரிக்க இயலாமலும் அப்பகுதி விவசாயிகள் தவித்துவருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "எடமணல், கொள்ளிடம் பகுதிகளில் அறுவடைச் செய்யப்படும் வெட்டி வேர்கள் திருப்பதி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கு அனுப்பப்படும், அப்படிப்பட்ட சூழலில் இந்த ஊரடங்கு எங்களுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றனர்.
இதையும் படிங்க: அடுத்த சாகுபடிக்கு மூலதனம் இல்லை: விவசாயிகளை புலம்பவைத்த ஊரடங்கு!