ETV Bharat / state

மயிலாடுதுறையில் விவசாயிகளுக்கு பயிர் மேலாண்மை பயிற்சி முகாம் தொடக்கம்! - mayiladudurai district news

நாகப்பட்டினம் :சீர்காழி அருகே தொழுதூரில் இயற்கை சார்ந்த நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

விவசாயிகள் பயிற்சி முகாம்
விவசாயிகள் பயிற்சி முகாம்
author img

By

Published : Feb 8, 2021, 8:13 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா தொழுதூர் கிராமத்தில், இந்திய நெல் ஆராய்ச்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து ஆதிதிராவிடர் துணை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குனர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கோபால கண்ணன் முன்னிலை வகித்தார்.

இந்த பயிற்சி முகாமில், தொழில்நுட்ப வல்லுநர் சந்திரசேகர் கலந்து கொண்டு விவசாயிகள் நெற்பயிர் சம்பந்தமாக என்னென்ன பிரச்னைகள் சந்திக்கிறார்கள், நெற்பயிர்கள் சம்பந்தமான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் விவசாயிகளிடம் எடுத்துரைத்தார். பின் அங்கக வேளாண்மை நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

நான்கு நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் வரும் 10ஆம் தேதி நாகை சிக்கலில் ஒருங்கிணைந்த விவசாய பண்ணைக்கு நேரடியாக சென்று விவசாயிகளுக்கு களப்பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இன்று(பிப்.8) நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் தொழுதூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:

நவமலையில் வசிக்க வீடு இல்லை... குடிக்க மட்டும் தண்ணீர் இணைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.