நாகை: நாகை மாவட்டத்தில் சம்பா, தாளடி, குறுவை நெற்பயிர்கள், பருவம் தவறி பெய்த கனமழையால் சேதமடைந்த நிலையில், மத்தியக்குழு பார்வையிட்டு சென்ற பிறகும், இதுவரை நிவாரணம் மற்றும் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.
நெற்பயிர் பாதிப்புகளுக்கு 6 ஆயிரத்து 248 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம், தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தும், நிதி வழங்கப்படவில்லை. நிவாரணம் கிடைக்காததால், விவசாயிகள் ஊடு பயிர்களாக உளுந்து மற்றும் பச்சை பயிறு விதைத்தனர். ஆனால், பருவம் தவறிய கனமழையால், உளுந்து பயிர்களும் நாசமாகின.
இந்த நிலையில், உளுந்து பயிர்களுக்கு 2020-2021ஆம் ஆண்டுக்கான காப்பீடு வழங்க வேண்டும், இந்த ஆண்டுக்கான நெல் மற்றும் உளுந்து பயிர்க் காப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மாவட்டம் பாலையூரில் விவசாயிகள் வயலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெற்றியில் ஒரு ரூபாய் நாணயத்தை ஒட்ட வைத்து நூதன முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: தமிழனா..? திராவிடனா..?; யுவன் சின்னபிள்ளை என்பதால் குழம்பிப்போயுள்ளார் - சீமான்