நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழபொதுனூர், கண்ணமங்கலம், பிற்கொடி, கங்களாஞ்சேரி, புதுக்கடை, ஏர்வாடி, விச்சூர், பெரிய கண்ணமங்கலம் ஆகிய எட்டுக் கிராமங்களுக்கு 2017- 18ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகையினை பயிர் பாதிப்பு இல்லை எனத் தவறுதலாக கணக்குக் காட்டி இன்சூரன்ஸ் நிறுவனம் நிவாரணத் தொகையினை வழங்கவில்லை என்றும், அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் எட்டுக் கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருமருகல் பேருந்து நிறுத்தம் அருகே நாகப்பட்டினம் - திருவாரூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரிடமும், நாகை வட்டாட்சியர் சங்கரிடமும் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, ஒரு வாரக் காலத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாகப்பட்டினம் வட்டாட்சியர் உறுதியளித்ததின் பேரில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க: 'விடாதே அப்படித்தான் கொல்லு...!' - அரியவகை விலங்கை கொன்ற அரக்க குணம் கொண்ட காவலன்!