மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்காக, அக்குழுவினர் ஜூலை 19ஆம் தேதி அங்கு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இந்த நடவடிக்கையினால், அதிர்ச்சி அடைந்துள்ள டெல்டா பகுதி விவசாயிகள், அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜூலை 19ஆம் தேதி மேகதாதுவிற்கு, பார்வையிட வரும் சுற்றுச்சூழல் ஆய்வுக் குழுவை கருப்புக் கொடியுடன் தடுத்து நிறுத்துவோம் என, எச்சரிக்கை விடுத்துள்ள தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் தலைவர் காவிரி தனபாலன், காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் நான்கு மாநில அரசுகளின் அனுமதியை பெறாமல் இதுபோன்று நடவடிக்கை மேற்கொள்வது என்பது ஏற்புடையது அல்ல என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.