நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்துள்ள உழுத்துக்குப்பை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 300 விவசாயிகள் 2017- 18 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையை செலுத்தியிருந்தனர்.
100 விவசாயிகளுக்கு மட்டுமே பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 200 விவசாயிகளுக்கு இதுவரை வழங்கவில்லை. இந்நிலையில் பயிர்க் காப்பீட்டுத் தொகையில் முறைகேடு நடந்துள்ளதாகக்கூறி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலர்கள், காப்பீடு நிறுவன அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
காப்பீடு அலுவலர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டால், அலட்சியமாக பேசுவதாகவும், பயிர்க் காப்பீட்டு தொகையை விரைந்து வழங்கி சம்பா சாகுபடியை தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.