ETV Bharat / state

நாகையில் 8 மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம் - நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

நாகப்பட்டினம்: காவிரி ஆற்றங்கரையில் அமையவுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகளை, விவசாயிகளிடம் கருத்து கேட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கரோனா
கரோனா
author img

By

Published : Nov 6, 2020, 2:54 PM IST

கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெறாமல் இருந்துவந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரவீன் பி நாயர் தலைமையில் இன்று (நவம்பர் 6) நடைபெற்றது.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது பேசிய விவசாயிகள், ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் வாய்க்காலுக்கும், காவிரிக்கும் இடையில் 237 சாயப்பட்டறை கழிவுகளை காவிரியில் திறந்துவிடும் வண்ணம் திறந்தவெளி நீர் சுத்திகரிப்பு மையம் ரூ. 711 கோடி செலவில் நான்கு இடங்களில் அமைய உள்ளதாகவும், காவிரிகரையில் இருந்து மூன்றரை கிலோமீட்டர் தொலைவில்தான் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைக்க வேண்டும் என்ற விதி இருந்தும் அதனை மீறி காளிங்கராயன் வாய்க்கால், காவேரி ஆற்றங்கரையில் அமைப்பதால் இது காவிரி நீரில் கலந்து விவசாய பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்தனர்.

இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இதனால் பாதிக்கக்கூடிய மாவட்ட விவசாயிகளின் சாதக, பாதக கருத்துகளை கேட்டு தமிழ்நாடு அரசு அதனடிப்படையில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அதுவரை இத்திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: நாகை வாக்காளர்கள் சந்தேகங்களை தீர்க்க இந்த எண்ணை தொடர்புகொள்ளலாம்...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.