நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் தேவங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராதாகிருஷ்ணன். இவர் விவசாய பணிகளுக்காக திட்டச்சேரியில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் நகை அடமானம் வைக்க வந்துள்ளார்.
பின்னர் வங்கியில் நகை அடமானம் வைத்த ரூ.50 ஆயிரம் பணத்தை தனது மிதிவண்டியில் வைத்துள்ளார். இவரை தொடர்ந்து நோட்டமிட்டுக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவருடைய மிதிவண்டியில் இருந்த பணத்தை லாவகமாக திருடிவிட்டு, சர்வ சாதாரணமாக இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக ராதாகிருஷ்ணன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், திட்டச்சேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆடிட்டர் வீட்டில் திருட்டு: ஒருவர் கைது!