நாகை: நாகை அடுத்த நாகூரில் பிரசித்த பெற்ற நாகநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜன.19 தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜை, பூர்ணாஹுதி தீபாரதனை நடைபெற்றது.
தொடர்ந்து வாஸ்து சாந்தி, கஜபூஜை, லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் இன்று காலை 5 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது.
கலசங்களில் புனித நீராட்டு வைபவம்
சிறப்புத் தீபாராதனைக்குப் பின்னர், சிவ வாத்தியங்கள் முழங்கக் கடங்கள் புறப்பட்டுச் சரியாகக் காலை 10மணிக்கு விமானங்கள் மற்றும் ராஜகோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, குடமுழுக்கு விழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது.
தொடர்ந்து, நாகநாத நாகவல்லி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்குத் தீபாராதனையும், இரவு 7 மணிக்குப் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீரைத் தலையில் தெளித்து மனமுருகி சிவனைத் தரிசனம் செய்தனர்.
இதியும் படிங்க: ஞாயிறு ஊரடங்கு: 350க்கும் மேலான காவல்துறையினர் தீவிர சோதனை