நாகப்பட்டினம் மயிலாடுதுறை தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான ராஜகுமாருக்கு கடந்த 14ஆம் தேதி கரோனா அறிகுறி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 16ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்த நிலையில் நேற்று (செப்.19) அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அதுபோல, மயிலாடுதுறை தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், பொது தொழிலாளர் சங்க தலைவருமான ஜெகவீர பாண்டியனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
![கரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8864187_img.jpg)
மேலும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா முருகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு கடந்த 16ஆம் தேதி கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதையும் படிங்க: கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் நடைபெற்ற திமுக கூட்டம்!