நாகை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள கோவிட் மையத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இந்நிலையில், மையத்தை தமிழ்நாடு அமைச்சர் மெய்யநாதன் நேற்று நேரில் ஆய்வுசெய்தார்.
இதையடுத்தும், நாகை நம்பியார்நகர் நடுநிலைப் பள்ளியில் 18 வயது முதல் 44 வயது வரை, 44 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் முகாமை தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து, வேளாங்கண்ணியில் தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்தார். பின்னர், நாகை மாவட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா தடுப்புப் பணிகள், தடுப்பூசி விவரங்கள் போன்றவை குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களுடன் அமைச்சர் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில், நாகை சட்டப்பேரவை உறுப்பினர் ஷாநவாஸ், மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், நாகை மாவட்ட திமுக பொறுப்பாளர் கௌதமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 20,421 பேருக்கு கரோனா பாதிப்பு