மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள பெரிய ஆலங்குளம் கிராமத்தில் வசித்துவந்தவர் விவசாயி போத்திராஜ் (32). இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் போத்திராஜ் தண்ணீர் பாய்ச்சுவதற்கு மோட்டாரை இயக்கிவிட்டு விவசாய நிலத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இதனையடுத்து அவர் மோட்டாரை நிறுத்த முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக அவர் மீன்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டார். இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மதுரை அரசு இராசாசி மருத்துவமனை மருத்துவர் போத்திராஜை பரிசோதித்துவிட்டு, அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையெ பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தூத்துக்குடி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு