நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த சிறுதலைக்காடு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; ”கடந்த 36 ஆண்டுகளுக்கு பின்னால் ஆளுகிற கட்சியை மீண்டும் ஆட்சியை பிடித்தது என்ற சரித்திரத்தை அதிமுக உருவாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டு முதலமைச்சர் அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப்பை ஏகோபித்த ஆதரவுடன் பெற்றுள்ளார். மக்களுடைய வரவேற்பை பெற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார்” என்றார்.
அதிமுகவின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி நிலவும் இந்தச் சூழலில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் இவ்வாறு கூறியிருப்பது கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:'தமிழ்நாட்டில் அதிமுகவை அசைக்க முடியாது' - அமைச்சர் செங்கோட்டையன்