மயிலாடுதுறை தாலுகா மறையூர் ஊராட்சி கோவங்குடி கிராமத்தில் சின்னகுளம் என்ற குளம் உள்ளது. இந்தக் குளத்தின் மேலே இன்று காலை 8.30 மணி அளவில் ராணுவ பயிற்சி விமானம் தாழ்வாக பறந்துள்ளது. சிறிது நேரத்தில் குளத்தில் பலத்த சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர். இந்த சத்தத்துடன் கூடிய அதிர்வு மயிலாடுதுறை சுற்றுவட்டாரத்தில் 30 கிலோமீட்டர் வரை எதிரொலித்தது.
இதனால் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்நிலையில் மறையூர் கிராமத்திலிருந்து சத்தம் வந்ததை அறிந்த மயிலாடுதுறை வட்டாட்சியர் பிரான்சுவா சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டார்.
விசாரணையில் பயிற்சி விமானத்தில் ஏர்லாக் க்ளியர் செய்வதற்காக நீர்நிலைகளில் காற்றை திறந்துவிடும்போது இவ்வாறு அதிர்வுடன் கூடிய சத்தம் வரும் என்பது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று வட்டாட்சியர் பிரான்சுவா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'ஆ. ராசாவை தேர்தல் பரப்புரை செய்ய அனுமதிக்கக் கூடாது!'