பூமியின் இயற்கை வளத்தை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 22ஆம் தேதி பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, நாகப்பட்டினத்தில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்த பாடல் பாடியும், நடனம் ஆடியும் குழந்தைகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், புவி வெப்பமாவதைத் தடுப்பது குறித்தும், கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வையும் ஓவியத்தின் மூலம் ஏற்படுத்தினர். மரம் வளர்ப்பதை ஊக்குவிக்க நூற்றுக்கணக்கான விதைப்பந்துகளை தயார் செய்தனர்.
வெயில் காலங்களில் பறவைகள் தண்ணீருக்காக அலைவதைத் தவிர்க்க 300க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் துளையிட்டு பறவைகள் அமரக்கூடிய பல்வேறு இடங்களில் குடிநீர் கலன் அமைத்துள்ளனர். மேலும், சமூக விலகலை பின்பற்றி மரக்கன்றுகளையும் நட்டனர்.
இதையும் படிங்க: உணவில்லாமல் அவதி: குரங்குகளின் பசியை போக்கிய காவலர்கள்!