தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு எல்லை சோதனைச் சாவடியான வாஞ்சூரில் நாகப்பட்டின மாவட்ட காவல்துறை சார்பாக வாகன சோதனை நடைபெற்று வருகிறது. மதுகடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் முழு சோதனை செய்த பிறகே தமிழ்நாடு மாநில எல்லைக்குள் அனுமதிக்கப்படுகிறது.
கார், பேருந்துகளில் வரக்கூடிய மக்களிடம் கைப்பை உள்ளிட்டவைகள் சோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் வாகன ஓட்டிகளிடம் சோதனையில் ஈடுபடும் காவலர்களை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு கேமரா பொருத்திய வாகனம் சோதனைச் சாவடி அருகே நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவை புளூடூத் இணைப்பு மூலம் மாவட்ட காவல் கணகாணிப்பாளர் கட்டுப்பாட்டு அறையில் தனி குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படியுங்க: