ETV Bharat / state

'வேளாண் திருத்த சட்ட மசோதாவை கைவிட வேண்டும்' - பி.ஆர். பாண்டியன் - பாரதிய ஜனதா கட்சி

மயிலாடுதுறையில் வேளாண் திருத்த சட்ட மசோதாவை கைவிட கோரி பி.ஆர். பாண்டியன் தலைமையில் மேள தாளங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் திருத்த சட்ட மசோதாவை கைவிட வேண்டும்

author img

By

Published : Jan 10, 2021, 2:50 PM IST

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில், நெடு பயணமாக வேதாரண்யத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி விவசாயிகள் நீதி கேட்டு இன்று (ஜன.10) வந்தனர். இதில், 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மேள தாளங்கள் முழங்க மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியிலிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்த சட்ட மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500ஐ உடனே வழங்க வேண்டும், கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை முழுவதும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

வேளாண் திருத்த சட்ட மசோதாவை கைவிட கோரி ஆர்பாட்டம்

அதன் பின்னர், ஆர்ப்பாட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் டி.ஆர்.பாண்டியன் கூறுகையில், ‘வேளாண் திருத்த சட்டத்தை ஏற்காத விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராடும் விவசாயிகளை பாரதிய ஜனதா கட்சி கேலிக்கூத்தாக கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு எந்த அரசியலும் கிடையாது.

நாங்கள் பாஜகவை எதிர்ப்பது வேளாண் திருத்த சட்ட மசோதாவை கைவிட வேண்டும் என்பதற்காக மட்டுமே தவிர, அவர்களை ஆட்சியிலிருந்து இறக்கி விட்டு, நாங்கள் ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக இல்லை. அதுபோல தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால் இத்திட்டத்தை எதிர்த்திருப்பார்கள்.

இத்திட்டத்தை ஆதரித்து உள்ள தமிழ்நாடு அரசு இந்த சட்டத்தை விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் எதிர்க்கிறார்கள். எனவே இதை நியாயபடுத்தாதீர்கள். ஆதரித்த நீங்களே சட்ட சபையைக் கூட்டி இதற்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றுங்கள் என்றார்.

இதையும் படிங்க: மு.க. அழகிரியின் அரசியல் பிரவேசம் திமுகவின் வெற்றியை பாதிக்கும் - அமைச்சர் செல்லூர் ராஜு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.