மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் மேலமுக்கூட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (30). எம்.இ முதுகலை முடித்துவிட்டு தனியாக தொழில் செய்துவரும் இவருக்கும், சிதம்பரம் அம்மாபேட்டையை சேர்ந்த சக்கரவர்த்தியின் மகள் சுகன்யா (27) என்பவருக்கும் இந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.
இத்திருமணத்தில் 40 சவரன் நகை, 5 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருமணம் ஆன நாள்முதல் சுகன்யாவிடம் அவரது கணவர் பிரசாந்த், மாமனார் கலைச்செல்வன், மாமியார் வள்ளி ஆகியோர் கூடுதலாக வரதட்சணை வாங்கி வரச்சொல்லி கொடுமைப்படுத்தி வந்ததாக சுகன்யா மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் காவல்துறையினர், இந்த மூன்று பேர் மீதும் வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள பிரசாந்த்தின் பெற்றோர் கலைச்செல்வன், வள்ளி ஆகியோரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மன்னிப்பு கடிதம் எழுதிவைத்துவிட்டு சூப்பர் மார்க்கெட்டில் திருடிய திருடன்