ETV Bharat / state

மனுஷன் இந்த அரிசியை திம்பானா...? ரேசன் அரிசியை சாலையில் கொட்டிய முதியவர்..! - Old man who poured rice into the road ..!

நாகப்பட்டினம்: ரேசன் அரிசியை சாலையில் முதியவர் ஒருவர் கொட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அரிசியை சாலையில் கொட்டும் முதியவர்
அரிசியை சாலையில் கொட்டும் முதியவர்
author img

By

Published : Nov 30, 2019, 12:01 AM IST

நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா பெருமாள் கோயில் தெற்கு வீதியில் உள்ள ரேசன் கடையில் 65 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் 20 கிலோ இலவச ரேசன் அரிசியை வாங்கியுள்ளார். அந்த அரிசி குண்டரிசியாக இருப்பதாக கூறி சாலை ஓரத்தில் நடந்தபடியே கொட்டியுள்ளார். இதைக் கண்ட ஒரு பெண் ஏன் அரிசியை கீழே கொட்டுறீங்க என்று கேட்டதற்கு, அரிசிங்கிர பேருல குண்டரிசி கொடுக்குறான், அத சாப்பிடமுடியுமா சோறுவடிச்சி, மனிஷன் சாப்பிட முடியாது, ஆடுமாடாவது திங்கட்டுன்னுதான் ரோட்டுல கொட்டினேன்.

முதியவரின் இந்த செயலை பார்த்த நபர் ஒருவர் அதை வீடியோவாக எடுத்துள்ளார். இதையறிந்த அந்த முதியவர் வீடியோ எடுத்துவிட்டியாடா, வாட்ஸ்ஆப்பில் அனுப்பு என்று கூறிவிட்டு சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அரிசியை சாலையில் கொட்டும் முதியவர்

இது குறித்து தகவலறிந்த குத்தாலம் வட்ட வழங்கல் அலுவலர் தையல்நாயகி, குறிப்பிட்ட ரேஷன்கடை ஊழியரிடம் விசாரணை நடத்தினார். பின்பு இது குறித்து ரேசன் கடை ஊழியர் அறிவழகன் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அதேப்பகுதியைச் சேர்ந்த ரமணி என்பதும், சமையல் தொழில் செய்து வருவதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: கர்நாடகாவிற்கு லாரியில் கடத்தப்பட்ட 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

Intro:ரேசன் அரிசியை சாலையில் கொட்டும் முதியவர் வீடியோ சமூக வளைதளங்களில் பரவும் எதிரோலி. அரசின் இலவச திட்டத்தை கொச்சைபடுத்துவதாக கூறி போலீசார் வழக்கு பதிவுBody:நாகை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பெருமாள் கோவில் தெற்கு வீதியில் உள்ள ரேசன் கடையில் 65 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் 20கிலோ இலவச ரேசன் அரிசி வாங்கியுள்ளார். அந்த அரிசி குண்டரிசியாக இருப்பதாக கூறி சாலை ஓரத்தில் நடந்தபடியே கொட்டியுள்ளார். இதைக் கண்ட ஒரு பெண் ஏன் இதை கொட்டுறீங்க என்று கேட்டதற்கு அரிசிங்கிர பேருல குண்டரிசி கொடுக்குறான் அத சாப்பிடமுடியுமா சோறுவடிச்சி, மனிஷன் சாப்பிட முடியாது ஆடுமாடாவது திங்கட்டுன்னுதான் ரோட்டுல கொட்டிவிட்டேன், இலவச அரிசி கொடுக்கிறேன் என்று நீட்டரிசி கொடுத்தாலும் சோறுவடிச்சி சாப்பிடலாம், குண்டரிசி கொடுத்தா மனிதன் சாப்பிடமுடியாது ஆடுமாடாவது திங்கட்டும் என்றுதான் ரோட்டுல கொட்டினேன், என்று கூறினார். அவரது செயலை வீடியோ எடுத்த நபரைப் பார்த்து எடுத்துவிட்டியாடா வாட்சப்பில் அனுப்பு என்று கூறிச் சென்றுவிட்டார். இந்த வீடியோ சமூக வளைதளங்களில் காலை முதலே வேகமாக பரவி வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த குத்தாலம் வட்ட வழங்கல் அலுவலர் தையல்நாயகி குறிப்பிட்ட ரேஷன்கடை ஊழியரிடம் விசாரணை நடத்தினார். இந்த செயலை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்ககோரினார். அந்த ரேஷன்கடை ஊழியர் அறிவழகன் குத்தாலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் குத்தாலம் புதுசாலியத்தெருவை சேர்ந்த ரமணி என்பதும் இவர் சமையல் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. அந்த நபர்மீது அரசின் இலவச திட்டத்தை கொச்சைப்படுத்தும் நோக்கத்துடன் அரிசியை சாலையில் கொட்டியும் அரசு பணி செய்பவர்களை அவமானப்படுத்தியும் அதைக்கேட்டதற்கு மிரட்டல் விடுத்துள்ளார.; என்று வழக்குப் பதிவு செய்து குத்தாலம் போலீசார் ரமணியை தேடிவருகின்றனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.