தீயாய் வேலை செய்யும் தேர்தல் பறக்கும் படையினர்:
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி (ஏப்ரல் 6) அறிவித்ததையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு, செயல்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை, சிறப்பு தாசில்தார் முருகேசன் தலைமையிலான அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது, கடலூரிலிருந்து சீர்காழி நோக்கி கார் ஒன்று வருவதைப் பார்த்த அலுவலர்கள் காரை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.
காரின் உள்ளே உரிய ஆவணங்களின்றி ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து வெள்ளியால் ஆன சின்னச் சின்ன சிலைகள் அடங்கிய பரிசுப் பொருள்களை பறிமுதல்செய்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் லட்சக்கணக்கான ரொக்கமும் பொருள்களும் பறிமுதல்