விலங்குகளுக்கும் கரோனா தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் வன விலங்குகளின் உடல் நிலைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு தலைமை வனக்காப்பாளரின் உத்தரவின் பேரில், நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலர் கலாநிதி தலைமையிலான வனத்துறை நிபுணர் குழு நாகை மாவட்டம் திருக்கடையூர் அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோயில் யானை அபிராமியை மருத்துவர்களைக் கொண்டு பரிசோதனை செய்தனர். அதில் கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
மேலும், யானையின் உடல் நிலை, உணவுத் தேவை, உடற்பயிற்சி, ஓய்வு மற்றும் நோய்த் தொற்று காலத்தில் பின்பற்ற வேண்டிய விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆகியவற்றை கோயில் நிர்வாகத்திற்கும், யானை பாகனுக்கும் விளக்கினர்.
சிமெண்ட் தரையில் யானை கால்களை தேய்ப்பதால் ஏற்படும் உராய்வால் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், யானையின் இருப்பிடத்தின் தரைப்பகுதி மணலாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பஞ்சாபில் புலிக்கு கரோனாவா?