மயிலாடுதுறை தொகுதி மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராமலிங்கம் மயிலாடுதுறை நகரம் முழுவதும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாதா கோயிலில் கிறிஸ்தவ மக்களிடம் வாக்கு சேகரிப்பை தொடங்கிய ராமலிங்கம், புதுத்தெரு, கச்சேரி சாலை, மாயூரநாதர் வீதி, செட்டிகுளம், பட்டமங்கலத்தெரு ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரித்தார்.
இதில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் ஐம்பதுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.