கடலூர் மாவட்டம் வாக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (50). திமுக ஒன்றியச் செயலாளரான இவர், இவரது மகளின் திருமணத்திற்காகச் சீர்காழி பகுதியில் வசிக்கும் உறவினர்களுக்குத் திருமண அழைப்பிதழ் வைக்கச் சென்றுள்ளார். பின்னர், பத்திரிக்கை வைத்துவிட்டு வீடு திரும்பிய போது, புத்தூர் அரசு கல்லூரி எதிரே காரின் டயர் வெடித்து சாலையோர புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரை ஓட்டிச் சென்ற முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் உடன் வந்த முருகனின் உறவினர் சக்திவேல் படுகாயமடைந்து சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காணாமல் போன நபர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!