ETV Bharat / state

'ரோலிங்... சார்' - குடியரசு தினத்தை மீண்டும் மாற்றிக் கூறிய ஸ்டாலின் - Nagappatinam MK Stalin's speech

நாகப்பட்டினம்: மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மீண்டும் குடியரசு தினத்தை மாற்றிக் கூறிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு நாகப்பட்டினம் மு.க. ஸ்டாலின் பேச்சு மு.க. ஸ்டாலின் பாஜக, அதிமுக குறித்து பேச்சு DMK leader MK Stalin's speech Nagappatinam MK Stalin's speech MK Stalin's speech About BJP, ADMK
DMK leader MK Stalin's speech
author img

By

Published : Jan 26, 2020, 7:21 PM IST

Updated : Jan 26, 2020, 7:39 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள லெட்சுமிபுரத்தில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், "நாம் கொண்டாடக்கூடிய மொழிப்போர் தியாகிகளை, இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உள்ளவர்கள் நினைத்துப் பார்க்கும் அளவிற்கு நம் தமிழ்நாடு போராட்டங்களை நடத்திக் காட்டியுள்ளது.

அன்றைய திமுக பொதுச்செயலாளர் அறிஞர் அண்ணா 1965ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி குடியரசு தினத்தை துக்க நாளாக அறிவித்ததால் கைது செய்யப்பட்டார். (ஜனவரி 25ஆம் தேதி குடியரசு தினம் என தவறுதலாக ஸ்டாலின் கூறினார்). தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தவர் கருணாநிதி. தற்போது மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜக மொழியாலும், இனத்தாலும், மதத்தாலும் மக்களை பிளவுபடுத்துகிறது.

மத்திய அரசு இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளையும் இரண்டு கண்களாக நினைத்து செயல்படுகிறது. அமைச்சர் பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடாமல் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் வளர்க்கும் அமைச்சராக உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி கொள்கை இல்லாமல் பாஜகவுக்கு பாதம் தாங்கும் முதலமைச்சராக செயல்படுகிறார்.

நெடுஞ்சாலைத்துறை டெண்டர்கள் முதலமைச்சரின் உறவினர்களுக்கும், பினாமிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை சந்திக்காமல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்குத் தடை வாங்கி உள்ளனர். இப்போது முதலமைச்சராக இருப்பதால் தடை வாங்கலாம். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் எடப்பாடி முதல் ஊழல் செய்த அனைத்து அமைச்சர்களும் சிறைக்கு செல்வது உறுதி.

பொள்ளாச்சியில் 250 இளம்பெண்கள் தொடர்ந்து எட்டு வருடங்களுக்கும் மேலாக பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். காவல்துறைக்கு தெரிந்தே இது நடந்துள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் அனிதாவின் தற்கொலை, பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்தது. கோவையில் பேனர் விழுந்து அனுராதா கால் உடைந்தது என எந்தப் பிரச்னையிலும் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், தமிழ்நாடு அரசு காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க முன் வர வில்லை. ஆனால், ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்கு மக்கள் கருத்துத் தேவை இல்லை என்று சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்து காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

மு.க. ஸ்டாலின் பேச்சு

திமுக இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்காது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி திமுக சார்பில் 28ஆம் தேதி நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கொள்கையுடன் உள்ளது. ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் தான் உண்டு தான் கொள்கை உண்டு என்று மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஆட்சி நடத்தி வருகிறார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஐந்து லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்துள்ளது. அதிமுக ஆட்சியில் மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படவில்லை ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை. பணத்தை மட்டுமே வாரி இறைக்கின்றனர். மத்திய அரசு சிஏஏ, என்ஆர்சி, என்டிஆர் ஆகிய மதவாத சதித் திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்ற முயற்சிக்கிறது.

இதனை முன்பு ஆதரித்த மாநிலங்கள் கூட, தற்போது எதிர்த்து வருகின்றன. மாநிலங்களவையில் இந்த சட்ட மசோதா வரும் போது அதிமுக 11 வாக்குகளையும் பாமக ஒரு வாக்கினையும் தந்து ஆதரித்தது. அதன் காரணமாக இந்தியாவில் தற்போது பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு உள்ளது. கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, மேற்கு வங்கம், ஒடிசா, ராஜஸ்தான், பீகார், பஞ்சாப், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் எனப் பல மாநிலங்களில் சட்டங்களை எதிர்க்கின்ற நிலையில் தமிழ்நாடு அரசு மட்டும் வாய்மூடி மௌனமாக உள்ளது ஏன்?

இதனை திரும்பப் பெற வலியுறுத்தி பிப்ரவரி இரண்டாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை வீடு வீடாகச் சென்று கையெழுத்து இயக்கம் நடத்தி ஜனாதிபதிக்கு அனுப்ப உள்ளோம்" என்றார். இந்தக் கூட்டத்தில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினர் இராமலிங்கம் நாகை மாவட்ட பொறுப்பாளர்கள் நிவேதா முருகன், கௌதமன் ஆகியோர் பேசினர்.

இதையும் படிங்க:

‘மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு மோடியும் எங்க டாடியும் தான் காரணம்’ - உதயநிதி

Intro:இந்திய நாட்டு மக்களை மதத்தால், மொழியால், இனத்தால் பிளவுபடுத்தும் சூழ்நிலையை பாஜக அரசு உருவாக்கியுள்ளது. திமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் கூட்டத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மயிலாடுதுறையில் பேச்சு. சமஸ்கிருதத்தை வளர்க்கும் அமைச்சராக தமிழ் துறை அமைச்சர் செயல்படுவதாக குற்றச்சாட்டு:-

Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே லெட்சுமிபுரத்தில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேசியதாவது:-
நான் கொண்டாடக்கூடிய மொழிப்போர் தியாகிகளை இந்தியாவில் உள்ள மாநிலங்களில் நினைத்துப் பார்க்கும் அளவிற்கு நம் தமிழகம் போராட்டங்களை நடத்தி காட்டியுள்ளது. திமுக பொதுச்செயலாளர் அறிஞர் அண்ணா 1965 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி குடியரசு தினத்தை துக்க நாளாக அறிவித்ததால் அண்ணா கைது செய்யப்பட்டார். (ஜனவரி 25ஆம் தேதி குடியரசு தினம் என தவறுதலாக ஸ்டாலின் கூறினார்).
தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தவர் கருணாநிதி. தற்போது மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜக மொழியாலும், இனத்தாலும், மதத்தாலும் மக்களை பிளவுபடுத்துகிறது. மத்திய அரசு இந்தி சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளையும் இரண்டு கண்களாக நினைத்து செயல்படுகிறது. அமைச்சர் பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடாமல் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் வளர்க்கும் அமைச்சராக உள்ளார்.
தமிழக முதல்வர் பழனிச்சாமி கொள்கை இல்லாமல் பாஜகவுக்கு பாதம் தாங்கும் முதல்வராக செயல்படுகிறார். நெடுஞ்சாலைத்துறை டெண்டர்கள் முதல்வரின் உறவினர்களுக்கும், பினாமி களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை சந்திக்காமல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு தடை வாங்கி உள்ளனர்.
இப்போது முதல்வராக இருப்பதால் இப்போது தடை வாங்கலாம் ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் எடப்பாடி முதல் ஊழல் செய்த அனைத்து அமைச்சர்களும் சிறைக்கு செல்வது உறுதி. பொள்ளாச்சியில் 250 இளம்பெண்கள் தொடர்ந்து எட்டு வருடங்களுக்கு மேலாக பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர் காவல்துறைக்கு தெரிந்தே இது நடந்துள்ளது.
நீட் தேர்வு விவகாரத்தில் அனிதாவின் தற்கொலை, பேனர் விழுந்து சுபஸ்ரீ இருந்தது, கோவையில் பேனர் விழுந்து அனுராதா கால் உடைந்தது என எந்த பிரச்சினையிலும் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க முன் வர வில்லை. ஆனால், ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்கு மக்கள் கருத்து தேவை இல்லை என்று சட்டத்திருத்தத்தை கொண்டுவந்து காவிரி டெல்டா மாவட்டங் களை பாலைவனமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
திமுக இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்காது ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி திமுக சார்பில் 28ஆம் தேதி நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கொள்கையுடன் உள்ளது. ஆனால் தமிழக முதல்வர் தான்உண்டு தான் கொள்கை உண்டு என்று மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஆட்சி நடத்தி வருகிறார். காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்துள்ளது. அதிமுக ஆட்சியில் மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படவில்லை ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை பணத்தை மட்டுமே வாரி செல்கின்றனர். மத்திய அரசு சிஐஏ, என்ஆர்சி, என்டிஆர் ஆகிய மதவாத சதித் திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்ற முயற்சிக்கிறது.
இதனை முன்பு ஆதரித்த மாநிலங்கள் கூட தற்போது எதிர்த்து வருகின்றன. மாநிலங்களவையில் இந்த சட்ட மசோதா வரும் போது அதிமுக 11 வாக்குகளையும் பாமக ஒரு வாக்கினையும் ஆதரித்தது அதன் காரணமாக இந்தியாவில் தற்போது பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளது. கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, மேற்கு வங்கம், ஒடிசா ராஜஸ்தான், பீகார், பஞ்சாப், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் என பல மாநிலங்களில் சட்டங்களை எதிர்க்கின்ற நிலையில் தமிழக அரசு மட்டும் வாய் மூடி மௌனமாக உள்ளது ஏன்?
இதனை திரும்பப் பெற வலியுறுத்தி பிப்ரவரி இரண்டாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை வீடு வீடாக சென்று கையெழுத்து இயக்கம் நடத்தி ஜனாதிபதி அனுப்ப உள்ளோம் என்றார். இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினர் இராமலிங்கம் நாகை மாவட்ட பொறுப்பாளர்கள் நிவேதா முருகன், கௌதமன் ஆகியோர் பேசினர்.

Conclusion:
Last Updated : Jan 26, 2020, 7:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.