மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவராக தட்சணாமூர்த்தி (அதிமுக) செயல்பட்டு வருகிறார். கலியபெருமாள் நகரில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகளில் ஊராட்சி மன்ற தலைவர் தலையிடக்கூடாது என கூறி சட்டநாதபுரம் ஊராட்சி திமுக ஒன்றிய கவுன்சிலர் விசாகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் நேற்று (மார்ச்.10) சாலை பணியை வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி ஆய்வு மேற்கொள்ளும்போது சட்டநாதபுரம் ஊராட்சி திமுக ஒன்றிய கவுன்சிலர் விசாகர் ,ஊராட்சி மன்ற தலைவர் தட்சணாமூர்த்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து ஊராட்சி மன்ற தலைவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகையை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த ஆசாமிகள் - அதிரடியாக கைதுசெய்த காவல் துறை!