நாகை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் மருத்தூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஜானகி சின்னதுரை, பிரியா, ஜெயந்தி, விஜயலெட்சுமி ஆகிய நான்கு பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில், ஜானகி சின்னதுரை தவிர, மற்ற மூவரும் இன்று தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனர்.
இதன்மூலம் திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த ஜானகி சின்னதுரை, போட்டியின்றி ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜானகி சின்னதுரை இதற்கு முன் இரண்டு முறை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார். மருத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக இவரின் கணவர் சின்னதுரை ஒருமுறையும் இவரின் மகன் பிரசன்னா இருமுறையும் பணியாற்றியுள்ளனர்.
குத்தாலம் ஒன்றியத்தில் 51 ஊராட்சிகளில் ஒன்றான மருத்தூர் ஊராட்சியில் மட்டும் ஊராட்சி மன்றத் தலைவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது கூடுதல் தகவல். இதன்பின் பேட்டியளித்த ஜானகி சின்னதுரை, தான் தேர்வு செய்யப்பட்டது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் கிராம மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை தான் செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் எதிரொலி: அதிமுக ஒன்றியச் செயலாளரை கூலிப்படை ஏவி கொல்ல முயற்சி!