மயிலாடுதுறை: சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றில் ஆறாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் உள்ளே அமைந்துள்ள திட்டுக்கிராமங்களான நாதல்படுகை, முதலை மேடு திட்டு, வெள்ளை மணல், கோரை தீட்டு உள்ளிட்ட கிராமங்களில் மூன்று நாட்களாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
தாழ்வான பகுதியில் உள்ள கிராம மக்கள் வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கி வருகின்றனர். கொள்ளிடம் திட்டு கிராமங்களில் கடந்த நான்கு மாதத்தில் ஆறாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் சேதம் அடைந்தன.
இன்று தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீர்காழியில் முகாம்களில் தங்கி உள்ளவர்கள் தங்கள் வீடுகளுக்குச்சென்று முன்னோர்களுக்கு, குலதெய்வத்திற்கு வழிபாடு செய்துவிட்டு மீண்டும் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தீபாவளி: பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் ஒளிரப்போவது எப்போது?